தனுஷ் ஜோடியாக மடோனா செபாஸ்டியன்

‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் தனுஷ், படத்தை பரபர, விறுவிறுவென படமாக்கி வருகிறார்.

சென்னையில் முதல் கட்டப் படப்பிடிப்பும், தேனியில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங்,  ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்தில் சிறு வயது ராஜ்கிரணாக தனுஷும் நடிக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக நடிக்க ‘காதலும் கடந்து போகும், கவண்’ படங்களின் நாயகி மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தில் சுமார் அரை மணி நேரம் மட்டுமேதான் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருமாம்.

விரைவில் ‘பவர்பாண்டி’ படத்தின் படப்பிடிப்பில் மடோனா கலந்து கொள்ள உள்ளார்.

Read Previous

ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபு படத்தின் பெயர் ‘ஏஜென்ட் சிவா’ ?

Read Next

‘பெல்லி சூப்புலு’ ரீமேக் உரிமை வாங்கிய கௌதம் மேனன்

Most Popular