‘பெல்லி சூப்புலு’ ரீமேக் உரிமை வாங்கிய கௌதம் மேனன்

தெலுங்குத் திரையுலகில் இந்த ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து அதிகப்படியான வசூலையும், வரவேற்பையும் கொடுத்த படம் ‘பெல்லி சூப்புலு’.

தருண் பாஸ்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் தேவரகொன்டா, ரித்து வர்மா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சுமார் 1 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ஒரு படமாகும்.

இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கியுள்ளார்.

அவர் படத்தை இயக்குவாரா அல்லது தயாரிக்க மட்டும் செய்வாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Read Previous

தனுஷ் ஜோடியாக மடோனா செபாஸ்டியன்

Read Next

உறவுகளின் மேன்மையைச் சொல்லும் ‘முன்னோடி’