பணத் தட்டுப்பாடு விவகாரம், விஜய் பேசியது என்ன ?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதைக் கடந்த வாரம் அறிவித்தார்.

அவரது அந்த அறிவிப்புக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று காலை திடீரென சில முன்னணி, முக்கிய தொலைக்காட்சிகளுக்கு மட்டும் ஒரு பேட்டி கொடுத்தார்.

அப்போது பிரதமரின் ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து தன்னுடைய கருத்துக்களை விஜய் பகிர்ந்து கொண்டார்…

அவர் பேசிய பேச்சின் முழு விவரம்….

“சென்டிரல் கவர்ன்மென்ட் எடுத்த இந்த மூவ் வந்து உண்மையிலேயே நல்ல விஷயம்தான்.

கண்டிப்பா இது வந்து உண்மையிலேயே நம்ம நாட்டுக்கு, தேவையான, ஒரு துணிச்சலான, வரவேற்கக் கூடிய, ஒரு முயற்சிதான்.

கண்டிப்பா இது நம்ம நாட்டோட பொருளாதாரத்தை வளர்த்துவிடும், அப்படின்கறதுல எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு நோக்கம் பெருசா இருக்கும் போது, அதுக்கான பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். என்ன ஒண்ணு, அந்த பாதிப்புகள் வந்து அந்த நோக்கத்தை விட அதிகமாகிடக் கூடாது அப்படின்றததான் நாம பார்த்துக்கணும்.

சில விஷயங்கள் நாம தவிர்த்திருக்கலாமோ, அப்படின்ற ஒரு சின்ன ஃபீல்தான். ஜெனரல் பப்ளிக், பசிக்கு சாப்பிட முடியாம, மருந்து மாத்திரை வாங்க முடியாம, வெளியூர் போயி, திரும்ப வீடு வந்து சேர முடியாம, அன்னன்னிக்கு கிடைக்கிற 500, 1000த்தை வச்சிக்கிட்டு, சின்னச் சின்ன தொழில்ல பண்ற வியாபாரிங்க முதல் கொண்டு தியேட்டர்ஸ், மால்ஸ், மார்க்கெட்ஸ், இந்த மாதிரி இவங்கள்லாம் தேவையில்லாம பாதிக்கப்படறாங்களோன்ற ஒரு சின்ன ஃபீல்.

அது மட்டுமில்ல, நான் நியூஸ்லலாம் நிறைய விஷயம் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. என்னன்னா, ஒரு பேத்தியோட கல்யாணத்துக்காக, ஒரு பாட்டி வந்து ஒரு இடத்தை வித்து, அந்தப் பணத்தைக் கொண்டு வராங்க, அந்தப் பணம் செல்லாது அப்படின்னு அவங்க கேள்விப்பட்ட உடனே, தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குப் போயிருக்காங்க.

ஒரு ஹாஸ்பிட்டல்ல, ஒரு நியூ பார்ன் பேபி, அந்தக் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை, அது டிரீட் பண்ண முடியாம அந்தக் குழந்தை இறந்து போயிருக்கு.

இந்த மாதிரி விஷயங்களைக் கொஞ்சம் அவாய்ட் பண்ணியிருக்கலாம், அப்படின்றதுதான்.

நாட்டுல ஒரு 20 பர்சேன்டேஜ் பணக்காரங்க இருப்பாங்களா…அதுல இருக்கிற ஒரு குரூப் பண்ற சின்ன பர்சேன்டேஜ் தவறுகளால, மீதி இருக்கிற 80 பர்சேன்டேஜ் மக்கள் என்ன பண்ணாங்க…

நான் திரும்பத் திரும்பச் சொல்றேன்…இது வந்து இதுவரைக்கும் யாரும் பண்ணாத, யாரும் பண்ண யோசிக்காத, ஒரு சிறப்பான பெரிய முயற்சிதான் இது, அதுல எந்த மாற்றமும் இல்லை, எந்தத் தவறும் இல்லை.

ஆனால், இப்படி ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணும் போது, ஒரு சட்டம் போடறாங்க…அதை அமல்படுத்தறாங்க…அதைப் பண்ணும் போது, என்னென்ன பிரச்சனைகள் வரும் அப்படின்றது முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டு, அதுக்கான அந்த ஸ்டெப்சை முனனாடியே எடுத்துப் பண்ணியிருந்தால் நல்லா இருந்திருக்குமோ அப்படின்றதுதான்…என்னுடைய ரொம்ப தாழ்மையான ஒரு கருத்து.

பட், இன்னிக்கு வந்து, செட்டில்ட் டவுன் ஆகியிருக்கு அப்படின்னுலாம் சொல்றாங்க..லாஸ்ட் 3, 4 நாளா இருந்த அந்த பேனிக் சிச்சுவேஷன் இல்ல. பட், இருந்தாலும், கிராமம் சைட்லாம், இன்னும் கொஞ்சம் கொஞ்சம் அவங்களுக்கு கஷ்டங்கள் இருக்கு.

சீனியர் சிட்டிசன்ஸுக்கு சின்ன முக்கியத்துவம் கொடுத்து அவங்களுக்கு இருக்கிற அந்தக் கஷ்டங்களை சீக்கிரமாவே சென்டிரல் கவர்ன்மென்ட்டு சார்ட் அவுட் பண்ணாங்கன்னா நல்லா இருக்கும்,” என விஜய் கூறினார்.

Read Previous

Vijay Sethupathi’s cameo in Kathanayagan

Read Next

விழாக்களுக்கு வரமாட்டார்கள், ஸ்ரீகாந்த் வேதனை

Most Popular