விழாக்களுக்கு வரமாட்டார்கள், ஸ்ரீகாந்த் வேதனை

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை​, திரைக்கதை​,​ வசனம், பாடல்கள்​ எழுதி ​இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட, கில்டு​ ​தயாரிப்பாளர் சங்கம் தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் நமீதா, வசுந்தரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது,

”சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம், அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும்.

இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி, பொய்யான காரணம் சொல்லி தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்து இருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன்.

விழா நடத்துபவர்கள் பலரது தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன். அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன்.

நான் சம்பந்தப்படாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன், ஊக்கப்படுத்துகிறேன். அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன். சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இப்படக்குழுவுக்கு வாழ்த்துகள்,” என்றார்.

‘சாயா’ பட இயக்குநர் வி.எஸ். பழனிவேல், இசையமைப்பாளர் ஏ.சி. ஜான் பீட்டர் , படத்தின் நாயகன் சந்தோஷ் கண்ணா, நடிகர்கள் கராத்தேராஜா, ‘பாய்ஸ்’ராஜன், சின்ராஜ் ,​ ​நடிகைகள் வசுந்தரா, பட நாயகி காயத்ரி, இயக்குநர்கள் மனோஜ் குமார், கே.எஸ். அதியமான், தாமிரா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Read Previous

பணத் தட்டுப்பாடு விவகாரம், விஜய் பேசியது என்ன ?

Read Next

நான் ‘காப்பி’தான் அடிக்கிறேன் – பிரேம்ஜியின் பெருமிதம்