தெலுங்கில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தார்.

அடுத்து தெலுங்கில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றிலும் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

ராம்சரண், சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குக் கதை எழுதிய புச்சி பாபு சனா என்பவர் இயக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன்.

அவர் சொன்ன காதல் கதை விஜய் சேதுபதியை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். இப்படத்தில் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் தேஜ் கதாநயாகனாக அறிமுகமாக உள்ளார்.

வைஷ்ணவ் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி நடிக்கும் ‘சை ரா’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் இரண்டாவது தெலுங்குப் படம் இது.

Read Previous

ஏப்ரல் 12-ல் பிரம்மாண்டமாய் வெளியாகும் ‘காஞ்சனா 3’

Read Next

ஸ்டுடியோக்களுக்கு மாறும் ‘விஜய் 63’ படப்பிடிப்பு

Most Popular