ஏப்ரல் 12-ல் பிரம்மாண்டமாய் வெளியாகும் ‘காஞ்சனா 3’

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கும் படம் ‘காஞ்சனா 3’.

ராகவா லாரன்ஸ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய இரண்டு படங்களும் மிகப் பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. அந்தப் படங்களைவிட இந்தப் படத்தை இன்னும் மிரட்டலாக உருவாக்கியிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தைத் தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள்.

ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் கோடையில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படமாக காமெடி பிளஸ் கமர்ஷியலுடன் உருவாக்கி உள்ளார்களாம்.

Read Previous

இயக்குனர் மகேந்திரன் மறைவு

Read Next

தெலுங்கில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி

Most Popular