மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்கா குருவி’.
“உயிர், மிருகம், சிந்து சமவெளி, கங்காரு’ படங்களை இயக்கிய சாமி இப்படத்தை இயக்குகிறார்.
1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழா வில் பங்கு பெற்ற, இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாக்களான வார்சா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் (Warsaw International film festival) விழாவில் ஆடியன்ஸ் அவார்ட், சிங்கப்பூர் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் விழாவில் சில்வர் ஸ்கிரீன் அவார்ட், O.U.L.U இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அவார்டு விழாவில் (OULU international childrens film festival), C.I.F.E.J. அவார்ட், நியூபோர்ட் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் Rhode island விழாவில் – பெஸ்ட் ஃபாரின் பிலிம் அவார்ட் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு அனைவரையும் நெகிழ வைத்த படம் ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’ (Children Of Heaven).
உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குனரான மஜித் மஜிதி இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளிவந்த பெர்சியன் மொழித் திரைப்படம் ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’.
அந்தப் படத்தின் தென்னிந்திய மொழி மாற்றும் உரிமையை பெற்று அதை ‘அக்கா குருவி’ என்ற பெயரில் மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ், தெலுங்கில் இப்பத்தைத் தயாரிக்கிறார்கள்.
11 வயது சிறுவன், 7 வயது தங்கை இருவருக்குமான பாசம்தான் இந்தப் படத்தின் மையக் கரு. தங்கையின் ஷுக்கள் தொலைந்துவிட அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடனும் சொல்லும் கதைதான் ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்காக 200க்கும் மேற்பட்டவர்களைப் பார்த்து இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
கிளாசிக்கல் டான்ஸர் ஆன தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி ‘ஷூ’ ஒன்றும் இடம் பெறுகிறது. தமிழ் ரசிகர்களுக்காக படத்தில் சில காட்சிகளைச் சேர்த்துள்ளார்கள்.
படப்பிடிப்பு கொடைக்கானல் அருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊரான பூம்பாறை கிராமம் உள்ளிட்ட இடங்களில் 55 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கி முடித்துள்ளார்கள்.
தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.