‘படகோட்டி’ இயக்குனரின் பேரன் இயக்கும் ‘யார் இவன்’

சினிமாவில் நடிப்பதற்குத்தான் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் அதிகம் வருகிறார்கள். ஆனால், இயக்குனர்களின் வாரிசுகள் படங்களை இயக்க அதிகம் வருவதில்லை.

‘யார் இவன்’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு இயக்குனராக வருகிறார் மிகப் பெரும் இயக்குனரின் வாரிசு.

தமிழில், “உத்தம புத்திரன், படகோட்டி” ஆகிய சூப்பர் ஹிட் படங்களையும், தெலுங்கு, ஹிந்தியில் பல வெற்றிப் படங்களையும் இயக்கிய டி. பிரகாஷ் ராவின் பேரனும், ஹிந்தி, தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய டி.எல்.வி.பிரசாத்தின் மகனுமான சத்யா ‘யார் இவன்’ படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ள சத்யா தமிழில் இயக்கும் முதல் படம்தான் ‘யார் இவன்’.

இந்தப் படத்தில் சச்சின், இஷா குப்தா, பிரபு, கிஷோர் குமார், சதீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

“கபடி விளையாட்டுப் பின்னணியில் நகரும் கதை. கபடி வீரர் ஒருவரின் மனைவி கொல்லப்பட அந்தக் கொலை ஏன் நடந்தது, அதைச் செய்தது யார் என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் உருவாக்கியிருக்கிறோம்.

பிரபு, கிஷோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நாயகி இஷா குப்தா ஹிந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

என் தாத்தா டி.பிரகாஷ்ராவ் இயக்கிய ‘படகோட்டி’ படம் கடல் சார்ந்த ஒரு படம். ‘யார் இவன்’ படமும் கடல் பின்னணியில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

என் தாத்தா தமிழில் பெற்ற பெயரில் கொஞ்சமாவது பெற வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்கிறார் சத்யா.

‘யார் இவன்’ படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது.

Read Previous

Dhuruvangal 16 75th Day Thanks Meet Photos

Read Next

‘சைபர் கிரைம்’ பற்றிய படம் ‘இணையதளம்’

Most Popular