பரதக் கலையின் மேம்பாட்டை உலகெங்கும் பரப்புவதற்கு புதிய முயற்சியாக இக்கலையின் அருமை பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து அதை ஆர்வத்தோடு பயில வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு மாபெரும் பரத நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று 5000 பரதக் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க உள்ளார்கள்.
சென்னை, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடன அமைப்பில் உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது திருக்குறள்களை கருவாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட 26 நிமிடப் பாடலுக்கு 5000 பரத நாட்டியக் கலைஞர்கள் ஒன்று கூட நடனமாட உள்ளனர்.
பரதக் கலைஞரான பத்மா சுப்பிரமணி தலைமையேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில் பல பரத நாட்டியக் கலைஞர்களும், திரைப்பட நடன இயக்குனர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இந்நிகழ்வில் நடனமாடுவதற்கு பதிவு செய்த கலைஞருக்கு 26 நிமிடங்களுக்கான பாடலும், அப்பாடலுக்கு நடனக் கலைஞர் ஒருவர் ஆடுகின்றன ஆடல் வடிவமும் பதிவு செய்யப்பட்ட காணொளித் தட்டு (டிவிடி) வழங்கப்படும். அந்தக் காணொளியைப் பார்த்து பயிற்சி செய்து கலைஞர்கள் இந்நிகழ்வில் ஆடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கும், நடனப் பள்ளி இயக்குனர்களும் பல்வேறு வகையில் பணியாற்றி வருகிறார்கள்.
வெளியூரிலிருந்து வருகின்ற கலைஞர்களுக்கு தங்கும் இட வசதியும், பயிற்சி செய்வதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் பரதக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
5000 கலைஞர்கள் பங்கேற்க இருக்கும் ‘கின்னல் உலக சாதனை’ நிகழ்வு என்பதால் 5000 கலைஞர்களின் பெற்றோர்கள், 500க்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட நடனப் பள்ளிகளின் இயக்குனர்கள், 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்ய உள்ளதாலும், இதற்கான ஏற்பாடுகளை வேல்ஸ் பல்கலைக் கழகம், லஷ்மண் ஸ்ருதி, விசாகா மீடியா ஆகிய நிறுகூனங்கள் இரண்டு மாத காலமாக செய்து வருகின்றன.
இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்க விரும்பும் நடனக் கலைஞர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான தொலை பேசி எண்கள் – 98404 80791.96775 00442. 044 – 98947 15465, வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்ய – 98410 72593, 98947 15465.