‘சாமி 2’ – விக்ரமின் வில்லனாக பாபி சிம்ஹா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஹரி, விக்ரம் மீண்டும் இணையும் ‘சாமி 2’ படத்தில் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இருவரும் நடிக்க உள்ளனர்.

இப்போது படத்தில் விக்ரமின் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பாபி சிம்ஹா தேர்வு பற்றி இயக்குனர் ஹரி கூறுகையில்,

“நடிகர் விக்ரம் சார், ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல திறமையான நடிகராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம். அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல திறமையான நடிகராக இருக்கவேண்டும். அதனால் தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்கத் தேர்வு செய்து உள்ளோம்.

‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் ‘பெருமாள் பிச்சை ’என்ற வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும். தற்போது தயாராகவிருக்கும் ‘சாமி 2’வில் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கேரக்டரில் பாபி சிம்ஹா புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்,’’ என்றார்.

விக்ரம், பாபி சிம்ஹா இருவரும் தேசிய விருதுபெற்ற நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

 

Read Previous

Thiruttuppayale 2 – Teaser

Read Next

ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் இரண்டு படங்கள்

Most Popular