ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் இரண்டு படங்கள்

ஸ்டோன் பென்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 150 படத்திற்கும் மேலாக சப்-டைடிட்லிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக 2015ல் ‘பெஞ்ச் டாக்கீஸ்’ என்கின்ற பெயரில் 5 குறும்படங்களையும், 2016 ல் ‘அவியல்’ என்கின்ற படத்தின் மூலம் 4 குறும் படத்தினையும் ஒன்றிணைத்து ஒரு மிகப் பெரிய சாதனை படைத்து குறும்பட இயக்குனர்களுக்கு ஊக்கம் மற்றும் பாதை வழிவகுத்துக் கொடுத்தது.

தற்பொழுது தனது சொந்த தயாரிப்பினை வெள்ளித் திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால் பதித்து இரண்டு திரைப்படத்தினையும், வெப் சீரீஸ் ஒன்றினையும் தயரித்துள்ளனர்.

முதலாவதாக ‘மேயாத மான்’ என்ற படத்தினையும், அடுத்து ‘மெர்குரி’ என்ற திரைப்படத்தையும், ‘கள்ளச் சிரிப்பு’ என்ற வெப் சீரீஸ் ஒன்றையும் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது.

‘மேயாத மான்’ படத்தில் நடிகர் வைபவ், விஜய் டிவி ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்த நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ரத்தினகுமார் இயக்க, புதுமுக ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளனர்.

இரண்டாவதாக ‘மெர்குரி’ எனும் படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். படத்தினை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தினை கார்த்திகேயன், சந்தானம் ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.

‘டெண்ட் கொட்டா’ உடன் இணைந்து ‘கள்ளச் சிரிப்பு’ என்ற வெப் சீரீஸ் ஒன்றையும் ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கிறது. இதை ரோஹித் எழுதி நடித்துள்ளார். அவருடன் அம்ருதா, சீனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். புதுமுக ஒளிப்பதிவாளர் தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் இசையமைக்க கல்யாண் தயாரித்துள்ளார். இதை வெளியிடும் தேதி விரைவில் வெளியிடப்படும்.

சோமசேகர் (USA) மற்றும் கல்ராமன் (USA) போன்றவர்களுடன் இணைந்து புதிய அணியாக பணியாற்றுவதில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் பெருமையும் நல்ல மகிழ்ச்சியும் அடைந்துள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.

Read Previous

‘சாமி 2’ – விக்ரமின் வில்லனாக பாபி சிம்ஹா

Read Next

தியேட்டர் செலவுகள் – ஆர்.கே. செல்வமணி நியாயமான பேச்சு

Most Popular