‘பாகுபலி 2’ – தமிழில் 80 கோடிக்கும் மேல் லாபம்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா மற்றும் பலர் நடித்து ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த படம் ‘பாகுபலி 2’.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம், சுமார் 1600 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தமிழில் இதுவரை வெளிவந்துள்ள படங்களிலேயே அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

இதுவரை 80 கோடி ரூபாய்க்கும் மேல் லாபமாக இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழில் இதற்கு முன் வேறு எந்தப் படமும் இப்படி ஒரு லாபத்தைக் கொடுத்ததில்லை என்கிறார்கள்.

தமிழில் சுமார் 47 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்தப் படம் 130 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்துள்ளது.

ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரைக் காட்டிலும் தெலுங்கிலிருந்து ‘டப்பிங்’ ஆகி வந்த இந்தப் படத்தின் மூலம் இப்படி ஒரு லாபம் கிடைத்ததை வேறு எந்தப் படமும் அதற்குள் முறியடித்துவிட முடியாது என்றே தெரிவிக்கிறார்கள்.

75 நாட்களைக் கடந்து படம் தமிழ்நாட்டில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Read Previous

‘கூட்டத்தில் ஒருத்தன்’ – வாய்ப்பு கேட்டு நடித்த அசோக் செல்வன்

Read Next

பெண் காவலர்களைப் பெருமைப்படுத்தும் ‘மிக மிக அவசரம்’

Most Popular