வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’.
இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் E. ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், காவேரி மாணிக்கம், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, வசனத்தை இயக்குநர் கே.பி. ஜெகன் எழுதியுள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இந்தப் படம்.
காவலர்களின் வலியை அறிந்து ‘மிக மிக அவசரம் ‘படத்தின் கதையை செதுக்கியுள்ளார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.
“காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது. அதிலும் பெண் காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒரு சொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையை பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளோம்,” என்கிறார் சுரேஷ் காமாட்சி.
இப்படத்தின் டீசர் ஒரு இலட்சத்தை தாண்டி பார்க்கப்பட்டு வருகிறது.