ரஜினிகாந்த்தை முந்தும் கமல்ஹாசன்

தமிழ்த் திரையுலகத்திலிருந்து அடுத்து யார் அரசியல் உலகத்திற்குள் நுழையப் போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களைச் சந்திக்க ஆரம்பித்ததும் விரைவில் அவர் அரசியலில் குதிப்பார் என்றார்கள். ஆனால், அவரோ வழக்கம் போல அவருடைய அரசியல் எண்ணத்தை மீண்டும் தள்ளி வைத்துவிட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டக் காலத்திலிருந்தே டிவிட்டரில் அடிக்கடி கருத்துக்களைப் பதிவிட்டு வந்த கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக கடுமையாகவே விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.

பதிலுக்கு தமிழக அமைச்சர்களும், மற்ற அரசியல்வாதிகளும் கருத்துக் கூற ஆரம்பித்தார்கள்.

தமிழக அரசியலே இதனால் சூடாக மாறியது. இதனிடையே நேற்று இரவு திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்ட கமல்ஹாசன் மக்களே ஊழலால் அனுபவித்த இன்னல்களை எழுதி அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இரவு முதல் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக இது அமைந்துவிட்டது.

ரஜினிகாந்த் தான் அரசியலில் விரைவில் களம் காணுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நான் என்றோ அரசியலுக்குள் வந்துவிட்டேன் என கமல்ஹாசன் அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

ஆக, இப்போதைய சூழ்நிலையில் ரஜினிகாந்த்தை கமல்ஹாசன் முந்திக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

Read Previous

பெண் காவலர்களைப் பெருமைப்படுத்தும் ‘மிக மிக அவசரம்’

Read Next

‘துப்பறிவாளன்’ எனக்கு முக்கியமான படம் – விஷால்