கலைப்புரி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ், உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் கடந்த வாரம் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
கடந்த 5 நாட்களில் இந்தப் படம் 33 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தனுஷ் படங்களின் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் தாணு இன்று நடைபெற்ற வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவர் தெரிவித்த வசூல் விவரம்…
தமிழ்நாடு ஏரியா
சென்னை, செங்கல்பட்டு – 6.70 கோடி
கோவை – 3.22 கோடி
மதுரை – 2.40 கோடி
திருச்சி – 2.10 கோடி
சேலம் – 1.95 கோடி
வட ஆற்காடு – 1.48 கோடி
தென்னாற்காடு – 1.65 கோடி
திருநெல்வேலி – 1.30 கோடி
கேரளா – 2.75 கோடி
வெளிநாடுகள் – 10 கோடி
மலேசியாவில் மட்டும் 5 நாட்களில் 5.30 கோடி ரூபாயையும், அமெரிக்காவில் முதல் நாள் வசூலாக 1.48 கோடியும், சிங்கப்பூரில் முதல் நாள் வசூலாக 1.38 கோடியும் வசூலித்ததாகச் சொன்னார். மேலும் படத்தின் வசூல் விவரம் வந்து கொண்டிருக்கிறது என்றவர் வரும் 18ம் தேதி இப்படம் ஹிந்தியில் சுமார் 1200 தியேட்டர்களிலும், 25ம் தேதி தெலுங்கிலும் வெளியாக உள்ளதாக அறிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “வேலையில்லா பட்டதாரி 3’ படம் கண்டிப்பாக வரும், படத்தின் கதையை நானே எழுதுவேன்,” எனத் தெரிவித்தார்.
இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், “படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. இதுதான் வெற்றியா என்கிற மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். படத்தின் வசூல் விவரங்களைக் கேட்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. என் மேல நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மூன்றாம் பாகம் இயக்கும் வாய்ப்பை தனுஷ் சார் கொடுத்தால் மகிழ்ச்சியடைவேன்,” என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் பரந்தாமன், நடிகர் விவேக் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.