பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹூ’.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

கதாநாயகி தேர்வு சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் பிரமோத், இப்படத்தின் கதாநாயகி ஸ்ரத்தா கபூர் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.

ஹிந்தியில் ‘ஆஷிக் 2’ படத்தின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட ஸ்ரத்தா கபூர் தற்போது ‘ஹசீனா பார்க்கர்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

‘சாஹு’ படம் மூலம் தென்னிந்தியா பக்கம் வருகிறார்.

“ஸ்ரத்தா கபூர் கதைக்கு மிகவும் பொருத்தமான தேர்வு, அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. இது பிரபாஸ் நடிக்கும் முதல் ஹிந்திப் படம் என்பதால் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. பரபரப்பான-விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுக்கு குறைவிருக்காது,” என படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகுபலி – 2 வெளியீட்டுடன் ரசிகர்களின் பார்வைக்காக வெளியிடப்பட்ட ‘சாஹு’ டீஸர், வெகுவான வரவேற்பைப் பெற்றதுடன், ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் கிளப்பி இருக்கறது.

‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். சாபு சிரில் கலை இயக்குனராகவும், மதி ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பாளராகவும் இப்படத்தின் பணியாற்றுகிறார்கள்.

சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் இத் திரைப்படத்திற்கு இசை சங்கர் – எஷான் லாய்.

UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு ‘சாஹு’ திரைக்கு வருகிறது.

Read Previous

‘விஐபி 2‘ – 5 நாள் வசூல் எவ்வளவு ?, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Read Next

விவேகம் – டிரைலர் – வீடியோ

Most Popular