தயாரிப்பாளரின் சொந்த வெளியீட்டில் ‘மெர்சல்’ ?

‘விவேகம்’ படம்தான் நம்மை ஏமாற்றிவிட்டது, அதில் விட்டதை ‘மெர்சல்’ படத்தில் பிடித்து விடுவோம் என சிலர் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

‘விவேகம்’ படத்தின் ரிசல்ட்டைச் சொல்லி ‘மெர்சல்’ படத்தின் விலையைக் குறைத்து லாபம் பார்க்கலாம் என சிலர் கணக்கு போட்டு வைத்திருந்தார்கள்.

ஆனால், அவர்களின் கணக்கு தற்போது தப்பாகப் போய்விடும் போலிருக்கிறது. விஜய் படம் என்றாலே அது வசூலில் மோசம் செய்யாது, படம் சுமாராக இருந்தாலும் வசூலித்துவிடும் என தயாரிப்பாளருக்குத் தெரியாதா என்ன ?.

அதனால், தேவையில்லாத சிக்கல்கள் எதற்கு, ‘மெர்சல்’ படத்தை நாமே சொந்தமாக வெளியிட்டு விடுவோம் என படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்களாம்.

ஏற்கெனவே, பல வெற்றிகரமான படங்களை வெளியிட்ட அனுபவம் உள்ளவர்கள்தான் தேனாண்டாள் ஸ்டுடியோஸ். அடுத்தும் பல பிரம்மாண்டமான படங்களை வைத்திருக்கிறார்கள்.

எதையும் துணிச்சலுடன் அணுகும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ‘மெர்சல்’ படத்தின் வெளியீட்டையும் மிரட்டலாகச் செய்ய இப்போதே தயாராகிவிட்டார் என்கிறார்கள்.

Read Previous

‘கருப்பன்’ – விஜய் சேதுபதியின் அடுத்த வெற்றி

Read Next

‘களவாணி’ இரண்டாம் பாகம் ஓவியா சம்மதிப்பாரா ?

Most Popular