‘தர்பார்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு, ஏப்ரல் 10ம் தேதி மும்பையில் ஆரம்பமானது. சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இடையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் சென்னை வந்து வாக்களித்துவிட்டு மீண்டும் மும்பை சென்றனர்.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு மே 29ம் தேதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவது இதுவே முதல் முறை.

Read Previous

50 நாளில் முடிந்த ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு

Read Next

புதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி

Most Popular