ஒரு வாரத்தை அரைமணி நேரத்துக்குள் அடக்கி விடமுடியுமா ? முடியும் என சொல்கிறது புதிய தலைமுறை டிவியின் ‘யூத் டியூப்’ நிகழ்ச்சி.
வாராந்திர செய்திகளையும் நிகழ்வுகளையும் குட்டிக் குட்டிச் செய்தகளாக சுருக்கி ஒரே புட்டிக்குள் அடைத்து தருவதுதான் யூத் டியூப். குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு வாரந்திர நிகழ்வுகளைக் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.
மனதில் நின்ற செய்திகள், வாரம் முழுக்க பரபரப்பாக இருந்த செய்திகள், மனதில் நின்ற காட்சிகள், மறக்க முடியாத காட்சிகள், மறந்து விடவேண்டுமென்று நினைக்கும் நிகழ்வுகள், செய்திகள், சாதனைகள், சோதனைகள், பாராட்டுகள், விமர்சனங்கள், என்று உள்ளூர் முதல் உலக நிகழ்வுகள் அனைத்தையும் தொட்டுக் கொடுக்கிறது இந்த நிகழ்ச்சி.
சுவையான காட்சி நறுக்குகளை வித்தியாசமான முறையில் கலந்து கொடுக்கும் இந்த நிகழ்ச்சி புதிய தலைமுறையில் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கும், மறுஒளிபரப்பு ஞாயிறு இரவு 8:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியை கவின் மற்றும் மோகனா தொகுத்து வழங்குகிறார்கள்.