பெப்பர்ஸ் டிவி – ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி

சினிமா என்பது மிகப்பெரிய கடல் மாதிரி. இதில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சினிமாவில் நுழைவதற்கு ஒரு லட்சம் பேர் ஆசைப்படலாம். ஆனால் இதில் ஆர்வத்துடன் நுழைபவர்கள் ஐம்பதாயிரம் பேர்தான்.

இதிலும் விடாமுயற்சியாக போராடி வாய்ப்பை பெறுகிறவர்கள் என்னவோ ஆயிரம் பேர் தான். இந்த ஆயிரம் பேரில், படம் எடுத்து, அந்தப்படமும் தங்குதடையின்றி ரிலீஸாகி மக்கள் மனதில் பதிகிறவர்கள் என பார்த்தால் வெறும் பத்து பேர் தான். இப்படி ஜெயித்தவர்களை கணக்கிட்டால் லட்சத்தில் பத்து பேர்தான் சினிமாவில் இன்னும் இருந்து வருகிறார்கள்.

இப்படி சினிமாவில் சாதனை புரிந்தவர்களை, அடுத்து அவர்கள் படம் ரிலீசாகும் அந்தந்த வாரங்களில் அவர்கள் கடந்து வந்த வெற்றிப்பயணத்தை முழுமையாக 30 நிமிடங்களில் சொல்லும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சிதான் ‘30 மினிட்ஸ் வித் அஸ்’ நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த வாரங்களில் வெளியாகின்ற படத்தின் இயக்குனர், அந்தப் படத்தின் கதாநாயகன், நாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்டு அந்தப்படம் உருவானது எப்படி, அதை படமாக்க அவர்கள் பட்ட சிரமங்கள், நல்லது கெட்டது மற்றும் அந்தப் படத்தின் மூலம் புதிதாக சொல்லவரும் விஷயம் என படத்தை பற்றிய சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குபவர் சுமையா.

Read Previous

புதிய தலைமுறை டிவி – யூத் டியூப் நிகழ்ச்சி

Read Next

உண்மைக் கதையுடன் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’

Most Popular