‘மெர்சல்’, 6வது 100 கோடி கிளப்பில் விஜய்

தமிழ்த் திரையுலகத்தில் ‘எந்திரன்’ படத்திலிருந்துதான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாயை வசூலிக்க ஆரம்பித்தன.

‘எந்திரன்’ படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் 100 கோடி ரூபாயை வசூலித்தது. அதன் பின் விஜய் நடித்து வெளிவந்த படங்களில் “கத்தி, புலி, தெறி, பைரவா” ஆகிய படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தன.

தீபாவளியன்று வெளிவந்த ‘மெர்சல்’ படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்து 100 கோடி கிளப்பில் இடம் பிடித்துள்ளது. இந்தப் படமும் 100 கோடி வசூலித்ததன் மூலம் விஜய் நடித்த 6 படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தென்னிந்தியத் திரையுலகில் வேறு எந்த நடிகரும் இத்தனை 100 கோடி படங்களைக் கொடுத்ததில்லை.

ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன், கபாலி’, கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’, அஜித் நடித்த ‘வேதாளம், விவேகம்’, சூர்யா நடித்த ‘24, சி 3’, விக்ரம் நடித்த ‘ஐ’, ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா 2’, ஆகிய படங்கள் மட்டுமே தமிழில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளன.

தெலுங்கில் கூட வேறு எந்த நடிகரும் இத்தனை 100 கோடி படங்களைக் கொடுக்காததால் தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் விஜய்யை,  இனி தாராளமாக சூப்பர் ஸ்டார் எனச் சொல்லலாம்.

Read Previous

‘மெர்சல்’ பிரச்சனைக்கு ஆதரவு தராத ரஜினிகாந்த்

Read Next

நவம்பர் 8ம் தேதி ‘எம்ஜிஆர்’ வாழ்க்கை வரலாறு படம் ஆரம்பம்

Most Popular