ரஜினிகாந்த் படம் ஒன்று ஏதாவது பிரச்சனையில் சிக்கினால் திரையுலகத்தில் உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதே, மற்ற நடிகர்களின் படங்களுக்குப் பிரச்சனை என்றால் ரஜினிகாந்த் பல சமயங்களில் குரல் கொடுக்காமலே போயிருக்கிறார்.
‘மெர்சல்’ படம் ஜிஎஸ்டி வசனத்தால் வெளியீட்டிற்குப் பின் கடும் சர்ச்சையில் சிக்கியது. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களும் சிறிய நடிகர்களும் படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள்.
ஆனால், ரஜினிகாந்த் ‘மெர்சல்’ படத்திற்கான பிரச்சனை குறித்து இதுவரை வாயைத் திறக்கவில்லை. அதற்குக் கூட அவர் குரல் கொடுக்க வேண்டாம். கர்நாடக மாநிலத்தில் பெங்குளூரு, மைசூரு ஆகிய நகரங்களில் படத்தைத் திரையிட கன்னட அமைப்புகள் கலாட்டா செய்ததை எதிர்த்தாவது குரல் கொடுத்திருக்கலாமே.
‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி வசனத்திற்கு மக்கள் மத்தியில் மிகப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதால்தான் படம் வெளியான ஐந்தாவது நாளான இன்று கூடம் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கூட ரஜினிகாந்த் ‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவாகவும், கன்னட அமைப்புகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு வேளை வட இந்திய ஊடகங்கள் விஜய்யை தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என அழைத்தது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்குமோ….?.