தணிக்கை வாரியம் மீது ‘உறுதி கொள்’ இயக்குனர் குற்றச்சாட்டு

எபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘உறுதி கொள்’ திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி அன்று திரைக்கு வரவிருந்தது.

ஜிஎஸ்டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவால் அன்றைய தினம் படம் வெளி வரவில்லை.

வரும் நவம்பர் 3 அன்று படத்தைத் திரையிட்டுக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று படம் திரைக்கு வருகிறது.

இப்படத்திற்காக தணிக்கைச் சான்றிதழை, மிகவும் போராடித்தான் பெற்றோம் என்கிறார் படத்தின் இயக்குனர் அய்யனார்.

“சிறிய படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது மிகப் பெரிய சவாலாக இன்றைக்கு இருக்கிறது. படத்தோட தலைப்பை ‘எதிர் கொள்’ என்றுதான் பதிவு செய்தோம்.

எங்களுக்கும் டைட்டில் ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் குடுத்தார்கள். பப்ளிசிட்டி செய்து வரும் போது அதே தலைப்பை இன்னும் இரண்டு பேர் பதிவு செஞ்சிருக்கிறதா சொன்னாங்க. சரி, நாம் இவங்ககிட்ட போட்டி போட முடியாதுன்னு தலைப்பை ‘உறுதி கொள்’ என மாற்றி பதிவு செய்தோம்.

ஒரு வழியாக படத்தை முடிச்சி தணிக்கை பெற கொண்டு போனால் முதல் கமிட்டி, படத்தை ரிஜெக்ட் பண்ணாங்க. வன்முறை மற்றும் ரேப் சீன் நிறைய இருக்குன்னு காரணம் சொன்னாங்க.

நாங்களும் வாதிட்டோம். ரேப் சீன் படத்தில் காட்சியாக இல்லை, இன்றைக்கு பெண்களுக்கு எதிராக நடக்குற கொடுமையை விளக்க, கதையாகத்தான் சொல்லியிருக்கிறோம் என முறையிட்டோம். ரிவைசிங் கமிட்டியில் இரண்டு ஷாட் கட்டும், சில ஆடியோ கரக்சனோட ‘U/A’ சான்றிதழ் கிடைத்தது.

பெரியப் படங்களுக்கு நிறைய மோசமான காட்சிகளை அனுமதிக்குற சென்ஸார் சின்ன படத்தைத்தான் ரொம்பவும் குறி வைக்கிறாங்க.மூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன். அனைத்து தரப்பும் பார்க்கக்கூடிய படமாகத்தான் ‘உறுதி கொள்’ உருவாகி இருக்கிறது,” என்கிறார் இயக்குனர் அய்யனார்.

Read Previous

சூர்யா, செல்வராகவன் இணையும் படம் ஜனவரியில் ஆரம்பம்

Read Next

பெண்ணின் தற்கொலையை மையமாகக் கொண்ட ‘திட்டி வாசல்’

Most Popular