‘அவள்’ தீவிரமான திகில் படம் – சித்தார்த்

மிலிண்ட் இயக்கத்தில் சித்தார்த், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘அவள்’.

பேய்ப் படங்கள் சமீப காலமாக நகைச்சுவைப் படங்களாக மாறிவிட்ட நிலையில், இந்த ‘அவள்’ படத்தை தீவிரமான திகில் படமாக எடுத்திருக்கிறோம் என்கிறார் படத்தின் நாயகன் சித்தார்த்.

‘அவள்’ குறித்து சித்தார்த் பேசுகையில்,

” திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு, இந்திய சினிமாவில், நம்மை உண்மையிலே பயமுறுத்தும் பேய் படங்கள் நிறைய வரவில்லை என்ற வருத்தம் நீண்ட நாட்களாக இருந்தது. இதனாலேயே நானும் மிலிண்ட்-ம் ‘அவள்’ படத்தை எடுக்க முடிவெடுத்தோம்.

நானும் மிலிண்ட்-ம் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள். நானும் மிலிண்ட்-ம், மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனர்களாக ஒரே சமயத்தில் சேர்ந்தோம்.

நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை தான் ‘அவள்’. பொதுவாக திகில் படங்கள் மற்றும் திகில் படங்களைப் பற்றிய மக்களின் மனநிலையைக், கண்டு நிறைய ஆராய்ச்சிகளை நாங்கள் மேற் கொண்டோம்.

கடந்த சில காலமாகவே திகில் படங்கள் பற்றிய கண்ணோட்டம் மக்களிடையே மாறியுள்ளது. இதனை மாற்றி ‘தி கான்ஜுரிங்’ , ‘பேராநார்மல் ஆக்ட்டிவிட்டி’ , ‘தி ஈவில் டெட் ‘ போன்ற படங்களுக்கு இணையான திகில் படத்தை தர நானும் மிலிண்ட்-ம் நினைத்தோம். அந்த எண்ணத்தில் பிறந்த படம் தான் ‘அவள்’.

இது பயத்தில் உறைய வைக்கும் தீவிரமான திகில் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் அதுல் குல்கர்னியுடன் நடித்துள்ளேன். அவரது அர்ப்பணிப்பும், இப்படத்திற்கான அவரது சிந்தனைகளும் பெரும் பலமாக இருந்தது. ஆண்ட்ரியா இப்படத்திற்கு தூணாக இருந்தார். அவரது சுவாரஸ்யமான நடிப்பு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும்.

வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் ‘அவள்’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திகில் விருந்தாக நிச்சயம் இருக்கும்,” என்கிறார் சித்தார்த்.

Read Previous

பெண்ணின் தற்கொலையை மையமாகக் கொண்ட ‘திட்டி வாசல்’

Read Next

‘விழித்திரு’ – விரைவில்…திரையில்…

Most Popular