மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது.
இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கலில் ஒன்றாக ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல உயரங்களைத் தொடுவார் எனப் பலரால் கருதப்படும் ராகுல் பாஸ்கரன், மதுரையைச் சேர்ந்தவர்.
மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின், பணிமாற்றம் நிறைந்த வேலையால் இந்தியா முழுவதும் பயணம் செய்தவர் ராகுல் பாஸ்கரன். இயக்குனர் மீரா கதிரவன், ‘விழித்திரு’ படத்தில் ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.
இப்படம் பற்றி ராகுல் பாஸ்கரன் பேசுகையில்,
”இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸ்க்கு ஜோடியாக நடித்துள்ளேன். பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட தெரியாத, ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன்.
பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில், எனது கதை சிறப்பாக இருப்பதாகப் படத்தை ஏற்கனவே பார்த்த பலர் கூறினர் . தமிழ்நாட்டில் பிறந்து இந்தியா முழுவதும் வாழ்ந்துள்ளதால், எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி சரளமாக வரும்.
இப்படத்தில் எரிக்கா தமிழ் வசனங்களை கற்றுக் கொள்ள நான் உதவி செய்தது, எனது மொழியாற்றலை மேம்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.
சினிமாவில் எனது முன் மாதிரி, விஜய் சேதுபதி அண்ணா தான். கீழிருந்து போராடிப் பெற்ற அவரது வளர்ச்சியைப் போல்,என் வளர்ச்சியும் இருக்கு வேண்டுமென ஆசைப்படுகிறேன். இயக்குனர் மீரா கதிரவன் அவர்களுக்கு, என்றுமே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
அவரது மன வலிமைக்கு மிக பெரிய சன்மானம் கிடைக்கும். ரிலீசுக்கு முன்பு ‘விழித்திரு’ படத்தைப் பார்த்தவர்கள் தந்த பாராட்டுக்கள், ரிலீசுக்குப் பிறகும் தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் வரும் என நம்புகிறேன்,” என்கிறார் ராகுல் பாஸ்கரன்.