‘மெர்சல்’ திரைப்படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இன்னமும் கூட ஏறக்குறைய 80 சதவீதம் இருக்கைகள் நிரம்பி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவும் இருக்கின்றன.
12 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘மெர்சல்’ திரைப்படம் தற்போது 220 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வெளியான படங்களும் ‘மெர்சல்’ படத்திற்குப் போட்டியாக இல்லாததால் எப்படியும் அடுத்த வாரம் வரை படம் தியேட்டர்களில் இருக்கும் என்கிறார்கள். எப்படியும் 250 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிடும் என்றே சொல்கிறார்கள்.
ஏற்கெனவே, தமிழ்நாட்டில் ‘எந்திரன்’ படத்தின் வசூலை முறியடித்த ‘மெர்சல்’ படம் ‘எந்திரன்’ படத்தின் மொத்த வசூலையும் முறியடிக்குமா என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது.
‘எந்திரன்’ படத்தின் மொத்த வசூலான 280 கோடியைத் தாண்டவும் வாய்ப்புள்ளது. ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அங்கு படம் வெற்றி பெற்றால் எப்படியும் 50 கோடியைத் தாண்டலாம். அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் ‘மெர்சல்’ படம் 300 கோடியைத் தொடவும் வாய்ப்புள்ளது.
‘மெர்சல்’ படத்தின் அடுத்த சாதனை தெலுங்கு ரசிகர்களின் கையில்தான் உள்ளது.