‘நாங்க உதவினாலும் படம் ஓடாது’, உதயநிதிக்கு எச். ராஜா பதில்

‘மெர்சல்’ படம் வெளியீட்டிற்குப் பிறகு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா ஆகியோர் அந்தப் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வசனங்களுக்கு எதிராகப் பேசியதால் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின் அந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்து படத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. அதைத் தொடர்ந்து ‘மெர்சல்’ படத்தைக் கிண்டலடித்தும், பாஜகவினரின் விமர்சனங்களைக் கிண்டலடித்தும் பல மீம்ஸ்கள் வந்தன. பாஜகவினர் எழுப்பிய சர்ச்சையால்தான் ‘மெர்சல்’ படம் ஓடியது என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படம் நவம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. படத்தை ஓட வைக்க உதயநிதி ஸ்டாலின், பாஜகவை  நாடியுள்ளதாக செய்தி ஒன்று தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.

அதற்கு பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா டிவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார். “ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்,” என டிவிட்டர் பதிவில் ராஜா தெரிவித்துள்ளார்.

இப்போது இவர்கள் இருவரின் கருத்துக்களையும் மையமாக வைத்து பல மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Read Previous

250 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’

Read Next

‘அண்ணாதுரை’ படத்திற்கு ‘யு/எ’ சான்றிதழ்

Most Popular