ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்க சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, டயானா சம்பிகா, மகிமா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’.
இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல, படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை பெரிய விலை கொடுத்து ‘கருப்பன்’ படத்தை வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி வாங்கியிருக்கிறது.
இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியான போது பெரிய வரவேற்பைப் பெற்றது. விஜய் ஆன்டணி இரு வேடங்களில் முதன் முறையாக நடித்துள்ளார்.
‘அண்ணாதுரை’ படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது.