நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஐந்தாவது படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை ‘பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2’ ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின் நாயகியாக ‘வனமகன்’ சாயிஷா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
படத்தின் படப்பிடிப்பை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். படப்பிடிப்பு சென்னையில் ஐந்து நாள் நடைபெற உள்ளது. இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இன்றைய பூஜை விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர்கள் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா, இசையமைப்பாளர் D.இமான், 2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.