உதயா நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதை ‘உத்தரவு மகாராஜா’

ஜேசன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் உருவாகி வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’.

உதயா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை கையாண்டிருக்கிறார் இயக்குநர் அறிமுக இயக்குனர் ஆசிப் குரேஷி. தமிழ், இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது.

இப்படத்தில் பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

நாசர், கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, MS பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடை வெளிக்குப் பின் குட்டி பத்மினி நடிக்கிறார்.

தமிழில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திலும் மற்றும் பல இந்தி படங்களிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலாஜி ரங்கா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நரேன் பாலகுமாரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Read Previous

‘அண்ணாதுரை’யில் அர்ப்பணிப்புடன் நடித்த விஜய் ஆண்டனி

Read Next

மன்னிப்பு, வருத்தம் தெரிவித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ குழு

Most Popular