கே.பி.ஜெகன் இயக்கத்தில் உருவாகிறது ‘மாயாண்டி குடும்பத்தார்’ 2-ம் பாகம்.
2009-ம் ஆண்டு ராசு மாதுரவன் இயக்கத்தில் வெளியான படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. இதில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், தருண் கோபி, கே.பி.ஜெகன், ஜி.எம்.குமார், ரவி மரியா, சிங்கம்புலி, நந்தா பெரியசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழகத்தில் பி மற்றும் சி சென்டர்களில் இந்தப் படம் மாபெரும் வசூல் செய்தது.
தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராசு மாதுரவன் காலமாகிவிட்டதால், இதன் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார் கே.பி.ஜெகன்.
மணிவண்ணன் காலமாகிவிட்டதால், அவரைத் தவிர மீதி அனைவருமே இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்ப்ந்தமாகியுள்ளார்கள்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனிடெட் ஆர்ட்ஸ் நிறுவனமே, இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது.