தமிழ் மொழிக்கு அனிருத் பெருமை: மணிரத்னம் புகழாரம்

தமிழ் மொழிக்கு அனிருத் மிகவும் பெருமை என்று மணிரத்னம் புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று (ஜனவரி 10) CNN News 18 தொலைக்காட்சியின் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பலபிரிவுகளில் பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

இதில் ”Popular Choice – Youth Icon of the Year” என்ற விருதினை வென்றார் இசையமைப்பாளர் அனிருத். இந்த விருதினைப் பெறுவதற்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அனிருத்துக்கு விருதினை வழங்கினார் இயக்குநர் மணிரத்னம்.

விருது வாங்கிவிட்டு அனிருத் பேசியதாவது:

“இந்த விருதினை மணி சார் வாங்கியதில் பெருமைக் கொள்கிறேன். இவ்வளவு வருடங்களாக எங்களுக்கு தூண்டுகோளாக இருப்பதற்கு நன்றி. இந்தப் பயணம் கொலவெறி பாடல் மூலம் தொடங்கியது. எந்தவித நோக்கமும் இன்றி தொடங்கிய பயணம், இன்று இங்கே நின்றுக் கொண்டிருக்கிறேன்.

தென்னிந்திய படங்களுக்கு இசையமைப்பது எனக்கு வசதியான ஒன்று. ’ஜவான்’ மற்றும் ஷாருக்கான் சார் ஆகியவற்றால் மட்டுமே இங்கு நிற்கிறேன். அவரில் ஒருவராக என்னை ஆக்கிக் கொண்டார். அந்தப் படம் உருவாக்கத்தின் போது, “உனது இசையை அனைத்து இடங்களிலும் அனைவரும் கேட்கிறார்கள். 

இந்தப் படத்தின் மூலம் அனைத்து இந்தியர்களும் அனிருத் யார் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்” என்றார். இந்த விருதின் மூலம் இன்று அவர் பெருமைக் கொள்வார்”இவ்வாறு அனிருத் பேசினார்.

அனிருத் எப்படி என்று இயக்குநர் மணிரத்னத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “தமிழ் மொழிக்கு மிகவும் பெருமை. ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை இசை மேதை உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர் அதில் புதியவர். அதில் எங்களுக்கு பெருமை” என்று பதிலளித்தார்.

அதே போல் எப்போது மணி சாருடன் பணிபுரிய உள்ளீர்கள் என்ற கேள்விக்கு அனிருத், “மணி சார் – ரஹ்மான் சார் இணையில் வரும் பாடல்களைத் தான் தினமும் கேட்கிறோம். 

அவர்களோடு இணையின் தூண்டுகோளாகவே இன்று வரை இருக்கிறோம். இன்று அவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்களோ, அதையே நாங்கள் நாளை செய்துக் கொண்டிருப்போம். 

இந்தியாவே பெருமைக் கொள்ளும் இணை இவர்களுடையது. ஆகவே கண்டிப்பாக கேட்க மாட்டேன்” என்று பதிலளித்தார்

Read Previous

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நயன்தாரா

Read Next

மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்‌ஷன் அதிகமாகவே செய்திருக்கிறேன் – அருண் விஜய்