அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நயன்தாரா

அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

’கனா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் அருண்ராஜா காமராஜ். ஆனால், அந்தப் படம் திட்டமிட்டப்படி நடக்கவில்லை. 

இதனால் ‘லேபிள்’ என்ற வெப் சீரிஸை இயக்கினார். இதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது, தனது புதிய கதையொன்றை நயன்தாராவிடம் கூறியிருக்கிறார். அவருக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, ஓகே சொல்லியிருக்கிறார். 

இந்த சந்தோஷத்தில் தற்போது முழுமையான திரைக்கதை எழுதும் பணியில் இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

இதற்கு தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இந்தக் கூட்டணிக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Read Previous

ஓடிடியில் வெளியாகிறதா ‘சைரன்’?

Read Next

தமிழ் மொழிக்கு அனிருத் பெருமை: மணிரத்னம் புகழாரம்