‘மதயானைக் கூட்டம்’ படம் குறித்து வேல.ராமமூர்த்தி பேச்சுக்கு, இயக்குநர் விக்ரம் சுகுமாறன் கடுமையாக சாடியிருக்கிறார்.
விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், கலையரசன், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’மதயானைக் கூட்டம்’. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. விக்ரம் சுகுமாறன், கதிர் ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்கள்.
சமீபத்தில் வேல.ராமமூர்த்தி அளித்த பேட்டியொன்றில், விக்ரம் சுகுமாறன் தன்னை நடிக்கச் சொல்லி மிகவும் வற்புறுத்தியாகவும், தொடர்ச்சியாக தனக்கு போன் செய்து பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தப் பேட்டி இயக்குநர் விக்ரம் சுகுமாறனை அதிகமாக கோபப்படுத்தி இருக்கிறது. வேல.ராமமூர்த்தி அளித்த பேட்டி தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் விக்ரம் சுகுமாறன் கூறியிருப்பதாவது:
”வேலராமமூர்த்தி ”மிளகாய் “என்னும் படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார் அதைப் பார்த்து தான் நான் என்னுடைய ”மதயானைக் கூட்டம்” படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தேன். நான் அவரைக் கெஞ்சி நடிக்க வைத்ததாக பேட்டி கொடுக்கிறார். இவருக்கு என்ன தகுதி இருந்தது.
நான் நடிக்க வைக்க அறிவொளி இயக்கத்தில் நடித்ததற்காக யாரும் வாய் பண்புத் தரமாட்டார்கள் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டதால் நன்றி மறந்து பேசுகிறார்கள் _ நன்றி கெட்ட மனிதருக்கு நாய் கள் மேலடா என்று தான் சொல்லத் தோன்றுகிறது”
இவ்வாறு விக்ரம் சுகுமாரன் தெரிவித்திருக்கிறார்.