டிவிட்டரை அழிக்க வேண்டும் – ‘தலைவி’ கங்கனா

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹிந்தி நடிகையான கங்கனா ரணவத்.

சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டதற்காக கங்கனாவின் சகோதரி ரங்கோலி என்பவரது டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது.

அது குறித்து கங்கனா இன்று ஒரு வீடியோவில் அவருடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை தீவிரவாதிகள் எனச் சொல்ல டிவிட்டர் அனுமதிக்கிறது. ஆனால், உண்மையில் தீவிரவாதிகளை அப்படிச் சொல்ல அனுமதிப்பதில்லை.

அரசாங்கம் உடனடியாக இந்தியாவில் டிவிட்டரைத் தடை செய்ய வேண்டும். நமது நாட்டைச் சேர்ந்த சமூக வலைத்தளத்தை ஆரம்பித்து நமது கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read Previous

மகேஷ்பாபுவைத் தேடி வரும் பல கதைகள்

Read Next

‘ஹீரோ’ படத்திற்குத் தொடரும் தடை

Most Popular