இருட்டு – பேய்ப் படம் இயக்க பயந்த இயக்குனர்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், விஇசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி, சாக்ஷி சௌத்ரி, விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள ‘இருட்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் விஇசட் துரை பேசுகையில்,

“இப்படத்தின் மூலமாக எனக்குக் கிடைத்த அருமையான விஷயம் சுந்தர் சி சாரின் நட்பு. VTV கணேஷ் சார் தான் இப்படம் உருவாகக் காரணம். அவர் தான் இப்படத்தை உருவாக்கினார்.

ஸ்கிரீன் சீன் இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்கள். சுந்தர் சார் பேய் படம் செய்யலாம் என சொன்னபோது, நான் வேண்டாம் சார் எனக்கு பயம் சார் நான் பண்ண மாட்டேன் என்றேன். அப்ப நீங்க தான் சரியான ஆள், உலகின் மிகப்பெரிய ஹாரர் இயக்குநர் ஜேம்ஸ் வான் அவரும் பயப்படுபவர் தான் என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.

சுந்தர் சாரே ஒரு ஹாரர் இயக்குநர் அவர் படங்கள் கமர்ஷியல் கலந்து இருக்கும். அவர் ஐடியாக்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும். என்னுடையது வேறு மாதிரி இருக்கும். ஆனால் அவர் இந்தப்படம் முழுக்க பயப்படற மாதிரியான படமா இருக்கணும். நீங்க டைரக்ட் பண்ணுங்க நான் நடிக்கிறேன் என்றார். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப்படத்தில் உழைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விசயத்தை இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள்,” என்றார்.

சுந்தர் சி பேசியதாவது,

“ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப் படம் உருவாகக் காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன்.

நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விஷயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரைப் போடலாம் எனப் பேசினோம்.

VZ துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன் அவர் படங்கள் பார்த்து, அவர் வயலண்டாகா இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. பேய்ப்படம் பண்ண மாட்டேன் என்றார். அவரை தயார்படுத்தி நிறைய பேய்படங்கள் பார்க்க வைத்தோம். பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார்.

இஸ்லாம் பேய் சம்பந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை. இயக்குநராக VZ துரை முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும் எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக் கொண்டேன் என்று சொல்வார். ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். இந்தப்படம் புதிதான பேய்ப் படமாக இருக்கும். படம் டிசம்பர் 6 தியேட்டர் வருகிறது பார்த்து ஆதரவு தாருங்கள்,” என்றார்.

Read Previous

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்

Read Next

மூக்குத்தி அம்மன் – படப்பிடிப்பு ஆரம்பம்

Most Popular