மூக்குத்தி அம்மன் – படப்பிடிப்பு ஆரம்பம்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.

கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடந்த பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.

இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முதல் கட்டப் பிடிப்பில் விரைவில் இணைந்து நடிக்க உள்ளார்.

‘அவள், நெற்றிக்கண்’ படங்களின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படப்புகழ் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்க, திவ்யா நாகராஜன் மற்றும் அனுவர்த்தன் ஆகியோர் ஆடையலங்காரத்தை கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விஜயகுமார்.

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் கதை, திரைக்கதை. வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இப்படத்தையும் இயக்குகிறார்.

Read Previous

இருட்டு – பேய்ப் படம் இயக்க பயந்த இயக்குனர்

Read Next

ஜோதிகா, கார்த்திக்கு சூர்யா பாராட்டு

Most Popular