‘இந்தியன்’ பாணியில் ‘புஷ்பா’

‘இந்தியன்’ படத்தின் பாணியை பின்பற்றி பணிபுரிந்து வருகிறது ‘புஷ்பா’ படக்குழு.

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்து முதல் முறையாக எடிட் செய்து பார்த்தது படக்குழு.

ஒட்டுமொத்த காட்சிகள் சுமார் 4 மணி நேரம் அளவுக்கு இருந்ததால், அதனை 2-ம் பாகம் மற்றும் 3-ம் பாகம் எனப் பிரிக்கலாம் என்று திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறது. தற்போது 3-ம் பாகம் முழுமையாக இருப்பதால், 2-ம் பாகத்திற்காக சில காட்சிகளை படமாக்கி வருகிறது.

இதே பாணியை தான் தற்போது ‘புஷ்பா’ படக்குழுவினரும் செய்திருக்கிறார்கள். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்து திரையிட்டு பார்த்தது. இதுவும் 3:30 மணி நேரமளவுக்கு இருந்தது.

இதனைத் தொடர்ந்து 3-ம் பாகம் பண்ணலாம் என்று திட்டமிட்டு, கதையை எழுதி முடித்துவிட்டார்கள். தற்போது 2-ம் பாகம் எந்தளவுக்கு, 3-ம் பாகத்தின் தொடர்ச்சி என்ன என்பதில் பணியாற்றி வருகிறது படக்குழு.

‘இந்தியன்’ மற்றும் ‘புஷ்பா’ இரண்டுமே பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் என்பதால், இதன் 2-ம் பாகத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி

Read Next

துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு? – பேச்சுவார்த்தையில் நடப்பது என்ன?