துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு? – பேச்சுவார்த்தையில் நடப்பது என்ன?

துல்கர் சல்மான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று, தற்போது செர்பியாவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள். மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.கே.எஃப்.ஐ நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.

கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதில் முன்பு செய்யப்பட்ட படங்கள் ஒப்பந்தம் மற்றும் தேதிகள் பிரச்சினை காரணமாக விலகிவிட்டார் துல்கர் சல்மான். அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் இறங்கியது படக்குழு.

தற்போது துல்கர் சல்மான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், மணிரத்னம் தயாரிப்பு, இயக்கம் என்பதால் ஒ.கே சொல்லிவிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும், கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள படத்திற்கு தான் தயாராகி வருகிறார் சிம்பு. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி தற்போது தான் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், ஒரே கட்டமாக சிம்புவின் காட்சிகளை முடித்துவிட்டு, தேசிங்கு பெரியசாமி படத்திற்கு அனுப்பிவிடலாம் என்று பேசியிருக்கிறார்கள்.

வரும் வாரத்தில் இது தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது தெரியவரும்.

Read Previous

‘இந்தியன்’ பாணியில் ‘புஷ்பா’

Read Next

எகிறும் பட்ஜெட்: தவிக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு

Most Popular