அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி

அருண் பிரபு இயக்கத்தில் உருவாகும் அடுத்தப் படத்தின் நாயகனாக விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார்.

‘அருவி’ மற்றும் ‘வாழ்’ படங்களை இயக்கியவர் அருண் பிரபு. இதில் ‘அருவி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் விருதுகளை அள்ளியது. ‘வாழ்’ திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

புதிய கதையொன்றை எழுதி, பல்வேறு நடிகர்களை சந்தித்து கதையினை கூறிவந்தார். இறுதியாக அருண் பிரபுவின் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விஜய் ஆண்டனி. மேலும், தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் முன்வந்துள்ளார்.

இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Read Previous

அரிமாபட்டி சக்திவேல் – விமர்சனம்

Read Next

‘இந்தியன்’ பாணியில் ‘புஷ்பா’

Most Popular