கை கொடுக்குமா ‘இந்தியன் 2’, திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு

‘இந்தியன் 2’ திரைப்படம் பணப்புழக்கத்துக்கு கை கொடுக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

2024-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெளியான படங்கள் யாவுமே மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பினை பெறவில்லை. இதனால், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரிடமும் பணப்புழக்கம் என்பது முற்றிலும் இல்லை. அதுமட்டுமன்றி ஓரளவுக்கு வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் வெளியான படங்கள் கூட பெரும் ஏமாற்றத்தினை அளித்தது.

2-ம் கட்ட நிலையில் உள்ள நாயகர்கள் வெளியான படங்களைக் காண்பதற்கு கூட மக்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலை நீடித்தால், இன்னும் 5 மாதத்திற்குள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தேக்க நிலை உருவாகும்.

இந்த நிலை மாறுவதற்கு ‘இந்தியன் 2’ படம் கைகொடுக்கும் என்ற ஆவலுடன் இருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். ஏனென்றால் இதே போன்று ஜூன் மாதத்தில் வெளியான ‘விக்ரம்’ படம் திரையரங்க உரிமையாளர்களை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இதே போன்று ‘இந்தியன் 2’ படமும் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

தமிழகத்தில் மொத்த வசூலில் ‘இந்தியன் 2’ திரைப்படம் 100 கோடி ரூபாயை தாண்டும் என்று கூறுகிறார்கள். அப்படித் தாண்டினால் திரையரங்க உரிமையாளர்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும், தமிழ் சினிமாவும் ஓரளவுக்கு சீராகும் என்கிறார்கள். முழுமையாக சீராவதற்கு மக்கள் மத்தியில் சுமார் 5 – 6 படங்கள் பெரும் வரவேற்பைப் பெறவேண்டும் என்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, கஜால் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 2-வது பாகத்தினை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.

Read Previous

அரசியலில் களம் இறங்குகிறேனா ? – சஞ்சய் தத் மறுப்பு

Read Next

சூர்யா – சுதா கொங்காரா படம் டிராப் ?

Most Popular