மலையாளப் படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் கெளதம் மேனன்.
’மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்ளை இயக்கியவர் கெளதம் மேனன். தற்போது விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறது.
பணப்பிரச்சினையால் சிக்கியுள்ள கெளதம் மேனன், தற்போது நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, மலையாள படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் கெளதம் மேனன். இதற்காக முன்னணி நடிகர் ஒருவருடன் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார். அவர் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்.
மார்ச் 29-ம் தேதி ‘துருவ நட்சத்திரம்’ படத்தினை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்திற்கு படமொன்றை இயக்க வேண்டும். அது தொடர்பான விஷயங்களை பேசி முடித்துவிடு, மலையாள படத்தினை இயக்குவார் எனத் தெரிகிறது.
மேலும், இனி நடிப்பதைக் குறைத்துக் கொண்டு தொடர்ச்சியாக படங்களை இயக்கலாம் எனவும் முடிவு செய்திருக்கிறார் கெளதம் மேனன்.