கலர்ஸ் தமிழ் – ‘மாங்கல்ய சந்தோஷம், அம்மன்’ தொடர்களின் மகா சங்கமம்

கலர்ஸ் தமிழ் டிவியில் அடுத்த மகாசங்கமமாக ‘மாங்கல்ய சந்தோஷம்’ மற்றும் ‘அம்மன்’ ஆகிய தொடர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இணைய உள்ளன.

இதில் நித்யா மற்றும் சக்தி கதாபாத்திரங்கள் அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண என்ன முயற்சி செய்கிறார்கள் என்பது இந்த சங்கம கதைக்களமாக இடம் பெற உள்ளது.

மார்ச் 27ம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு இந்த ‘மகா சங்கமம்’ ஒளிபரப்பாகிறது.

இதில் ‘அம்மன்’ கதாபாத்திரத்தில் ரக்ஷிதா மகாலட்சமி நடிக்கிறார்.

மகாசங்கமம் எபிசோடுகள், இரு வேறுபட்ட கதைகளின் ஒரு கலவையாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அக்னி அம்மன் திருவிழாவிற்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு கோவிலில், இதன் முதன்மை கதாபாத்திரங்களான நித்யா மற்றும் சக்தி சந்திக்குமாறு விதி திட்டமிட்டிருக்கிறது.  

கோவிலில், குளத்திலிருந்து அம்மனது திருவுருவச்சிலையை வெளியில் எடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்ற பெண்களின் ஒரு குழுவிற்கு எதிராக சக்தியும், நித்யாவும் கோவிலில் போட்டியிடுவதை இதில் காணலாம்.  இதற்கிடையே ஈஸ்வர் (அமல்ஜித் நடிப்பில்), சமரசம் மற்றும் சக்தியின் தந்தை தேவாவுடன் (நடன இயக்குனர் தருண் நடிப்பில்) ரஞ்சித் என பலரும் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக அதே நேரத்தில் அங்கு இருக்க நேரிடுகிறது.  நித்யாவிற்கும், சக்திக்கும் என்ன நிகழப்போகிறது ? அவர்களது பயணத்தில் இன்னும் அதிக தடைகளும், பிரச்சனைகளும் இருக்கப் போகின்றனவா ? என்பதுதான் அடுத்த இரண்டு வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

மகாசங்கமம் நிகழ்ச்சி குறித்து கலர்ஸ் தமிழ் – ன் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன் கூறியதாவது,

“எமது மிகப்பிரபலமான நெடுந்தொடர்களான அம்மன் மற்றும் மாங்கல்ய சந்தோஷம் ஆகியவற்றின் மகா சங்கம எபிசோடுகளை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  பார்வையாளர்களை கதை நிகழ்வுகளோடு பின்னிப்பிணைந்தவாறு இருப்பதை உறுதிசெய்கின்ற திடீர் திருப்பங்களையும், ருசிகரமான நிகழ்வுகளையும் கொண்ட ஒரு சிறப்பான கதையை காட்சிப்படுத்துகின்ற இந்த எபிசோடுகளில் பிரமாதமான திறமை கொண்ட எமது நட்சத்திரங்கள் ஒன்றாக இணைகின்றனர்.  ஏராளமான திருப்பங்கள் மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளோடு தனிச்சிறப்பான சித்தரிப்பை மகாசங்கமம் எபிசோடுகள் கொண்டிருப்பதால் எமது பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் இதில் ஒன்றிப்போகுமாறு இது செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

அம்மன் கதாபத்திரத்தில் நடிப்பது குறித்து பேசிய நடிகை ரக்‌ஷிதா மகாலட்சுமி, 

“கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் நெடுந்தொடர்களை நான் மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்திருக்கிறேன்.  இவைகளின் மகாசங்கமம் சிறப்பு நிகழ்வுக்காக இந்த இரு தொடரின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரோடு சேர்ந்து பணியாற்றுவது உண்மையிலேயெ கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.  அம்மன் கதாபாத்திரத்தில் நடித்தது உண்மையிலேயே பிரமிப்பூட்டும் ஒரு அனுபவமாகும்.  மகாசங்கமம் எபிசோடுகளின் ஒட்டுமொத்த கதைக்களத்திற்கும் வழக்கத்திற்கு மாறான ஒரு திருப்பதை உருவாக்கும். இக்கதாபாத்திரத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு ஒரு அற்புதமான அனுபவம் என்றே நான் கூறுவேன்.  இதில் நடிப்பதை நான் மகிழ்ச்சியோடு அனுபவித்ததைப் போலவே, பார்வையாளர்களும் எனது இந்த கதாபாத்திரத்தை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

Read Previous

விஜய் டிவி – புதிய தொடர் ‘ராஜ பார்வை’

Read Next

மார்ச் 19ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular