லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் 'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள்.
லைகா தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ்குமரன் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்புப் பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.
'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களுக்கு இசையமைத்த மரகதமணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஹாரர் திரில்லர் படமாகத் தயாராகும் இப் படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் 2005ல் வெளிவந்த 'சந்திரமுகி'. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.