ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் குடும்பத்தினரை கொரானோ தாக்கியுள்ளது.
தனக்கு ‘கொரானோ பாசிட்டிவ்’ என நேற்று அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் தனித்தனியே டிவிட்டரில் தகவலைத் தெரிவித்தனர்.
இருவருக்கும் லேசான அறிகுறி இருந்தாலும் மருத்துவனையில் சேர்ந்தார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன், அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யாராய், இவர்களின் மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரானோ பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோருக்கு கொரானோ தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
அது குறித்து அபிஷேக்பச்சன் டிவிட்டரில், “ஐஸ்வர்யா, ஆராத்யா ஆகியோருக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என டெஸ்ட் செய்யப்பட்டுவிட்டது. அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அவர்களது நிலைமையை கவனித்து, தேவையானவற்றை செய்து தருகிறார்கள்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் எனது அம்மா ஆகியோருக்கு டெஸ்ட் நெகட்டிவ்தான். உங்கள் அனைவரின் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.
நானும் எனது அப்பாவும் டாக்டர்கள் முடிவு தெரிவிக்கும் வரை மருத்துவமனையில்தான் உள்ளோம். அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள், தயவு செய்து விதிகளை பின்பற்றுங்கள்,” என கேட்டுக் கொண்டுள்ளார்.