விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் முதல் பார்வை

அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்க ஆர்எஸ் கார்த்திக், காயத்ரி ரேமா, அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அஜினோமோட்டோ' படத்தின் முதல் பார்வை மற்றும், அசைவுப் பார்வை ஆகியவற்றை விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

கிரைம் திரில்லர் படமாகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆ. தமிழ் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' 'அஜினோமோட்டோ' என்பது சுவையை அதிகரிக்கக்கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாகக் கொல்லும் ஒரு விஷம். இதனை மையப்படுத்தி ‘அஜினோமோட்டோ’ படத்தின் கதை தயாராகியிருக்கிறது. கதையில் நடைபெறும் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு, அந்த சமயத்தில் நல்லதாகத் தோன்றும். ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இப்படத்தின் திரைக்கதை. மேலும் இது போன்ற அனுபவங்களை, கழுகுக் கண் பார்வையுடனான திரைக்கதையாக விவரிக்கும் போது, பார்வையாளர்களுக்கு புது வகையான அனுபவம் கிடைக்கும்,'' என்கிறார்.

கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு டி.எம். உதயகுமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எம். எஸ். ஸ்ரீநாத் மேற்கொண்டிருக்கிறார். 

Read Previous

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ‘எமகாதகி’ முதல் பார்வை

Read Next

‘ஆதி புருஷ்’ தியேட்டர்களில் 3 டி-யில் பார்க்க வேண்டிய படம் – பிரபாஸ்

Most Popular