நைசாட் மீடியா ஒர்க்ஸ், சாரங் பிரதர்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரைத்துறையில் தொழில்நுட்பக் கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஸ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் கதையினைக் கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இப்படத்தைத் தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான காதலில், ஒரு தரமான படத்தைத் தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர்.
புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
ரூபா கொடுவயூர் முதன்மைக் பாத்திரத்தில் நடிக்க, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், R.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. கிராமத்துப் பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.