‘ஆதி புருஷ்’ தியேட்டர்களில் 3 டி-யில் பார்க்க வேண்டிய படம் – பிரபாஸ்

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதி புருஷ்’. 

இந்தியாவின் இதிகாசமான ராமாயணத்தை தழுவி ‘மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி’ முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. டீசர் பற்றி பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. விஎப்எக்ஸ் மற்றும் அனிமேஷன் ஆகியவை மிகச் சுமாராக இருந்ததாக பரவலான கருத்து நிலவியது.

ஆனால், ‘3 டி’ படமாக உருவாகி வரும் இப்படத்தை தியேட்டர்களில் மட்டும்தான் பார்க்க வேண்டும் என படத்தின் இயக்குனர் ஓம் ராவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மொபைல் போன்களுக்காக இப்படம் உருவாக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி பற்றி எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ‘3 டி’ டீசரை மும்பையில் பத்திரிகையாளர்களுக்குத் தியேட்டரில் திரையிட்டனர். நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு பத்திரிகையாளர்களுக்கும் திரையிட்டனர். 

அந்த நிகழ்வில் பிரபாஸ் பேசுகையில், “ஆதி புருஷ்’ டீஸரை முதன் முதலில் ‘3 டி’ எஃபெக்டில் பார்த்த போது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக் காத்திருக்கும் அதே வேளையில் அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல ஆச்சரியமான தகவல்களை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் பிரபாஸ்.

Read Previous

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் முதல் பார்வை

Read Next

பரத், வாணி போஜன் நடிக்கும் ‘மிரள்’ – டீசர்