மணிரத்னம் – ஏ.ஆர். ரகுமான் – வைரமுத்து – பி.சி.ஸ்ரீராம் ஆகிய தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களின் பங்கேற்பில் நாளை வெளியாக உள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு தியேட்டர் வட்டாரங்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமல்லாது சிங்கிள் திரையரங்குகளிலும் முன்பதிவு ஆரம்பமான சில மணி நேரங்களுக்குள்ளாகவே இந்த வாரத்திற்கான பல காட்சிகளின் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடுமுறையில் இளைஞர்களின் ரசனைக்கேற்ப இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். 80களில் இயக்குனராக அறிமுகமான மணிரத்னம் இன்றைய இளம் ரசிகர்களையும் கவரும் விதத்தில் இந்தப் படத்தைக் கொடுத்திருப்பது மிகவும் வியப்பான விஷயம்தான்.
படைப்புக்கு வயது ஒரு தடையில்லை என்பதை மணிரத்னம் – ஏ.ஆர். ரகுமான் – வைரமுத்து – பி.சி.ஸ்ரீராம் கூட்டணி ‘ஓ காதல் கண்மணி’ மூலம் நிரூபித்துள்ளது.