யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.
இப்படத்தை மே 15ம் தேதி வெளியிடுவதாக சில மணி நேரங்களுக்கு முன் அறிவித்துள்ளனர்.
படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தணிக்கை வேலைகளும் முடிந்துவிட்டது.
மே 15ம் தேதி ‘மாஸ், புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் இன்று ஒரே நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இரண்டு பெரிய படங்கள் வெளிவர உள்ள நிலையில் அடுத்த மாதம் வெளியாக உள்ள இரண்டு பெரிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிட வேண்டிய ஒன்று.